சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அதி அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சீகா வைரசின் தொற்று அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.