இலங்கையிலும் கொரோனா வைரஸ் உறுதியானது!!

கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts