இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று காலை (4) 8.45 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.
சுதந்திரத்தின் இதயத்துடிப்பு என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சுதந்திரத்தின நிகழ்வானது இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகளும் மாலையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கலாசார நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அணிவகுப்புக்களை காண விரும்பும் பொது மக்கள் காலிமுகத்திடலுக்கு மாலை 7.00 மணிக்கு முதல் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின நிகழ்வுகள் தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.