இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று (நேற்று) இடம்பெற்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை இன்றைய தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தௌிவான வித்தியாசம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேர்தலில் வெற்றிபெறும் தரப்பினர் தமது வெற்றியை கொண்டாடும் போது தோல்வியடைந்த தரப்பினருக்கு பாதிப்புக்கள் இடம்பெறாத வகையில் வெற்றியைக் கொண்டாடுமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த தேர்தலை மிகவும் சுமுகமான முறையிலும் அமைதியான முறையிலும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.