இலங்கையின் முக்கிய இணைய தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பங்களாதேஷ் கிரே ஹெட் ஹெக்கர்ஸ் என்ற குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் முக்கிய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, ஆளும் கட்சியின் பிரதம கொறடா, தயட்ட கிருள கண்காட்சி போன்றவற்றின் உத்தியோகபூர்வ இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய காரணத்தினால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் வெளியிடப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.