இலங்கையின் மருத்துவத்துறையில் மற்றுமோர் அத்தியாயம்!! நாடு முழுவதிலும் ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் சேவை!!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8 விமான அம்புலன்ஸ்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார் .

Related Posts