இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் கட்டடத்தில் இந்த ஆவணப்படம் நேற்றுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதிக்கான தேடல் என்ற சனல் 4இன் கெலும் மக்ரேயின் ஆவணப்படமே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை பார்த்த அனைவரினதும் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படுவதாக கெலும் மக்ரே இதன்போது தெரிவித்துள்ளார்.
விசேட கலப்பு நீதிமன்றில் பெரும்பான்மையானவர்கள் சர்வதேச நீதிவான்களாக இருக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்