விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.