இலங்கையின் சாதனையை தகர்த்தது இங்கிலாந்து

ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.

251365.3

நேற்றய தினம் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக, இதுவரை 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி குவித்த 443 ஓட்டங்களே இருந்தது.

இந்தநிலையில் இங்கிலாந்து பெற்ற 444 ஓட்டங்களில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடியாக ஆடி 171 ஓட்டங்களையும், பட்லர், ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஜோ ரூட் 85 ஓட்டங்களையும் விளாசினர்.

445 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 275ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts