இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மோசடியான முறையில் அச்சிடப்பட்ட 5000 ரூபாய் தாள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் 5000 ரூபாய் தாள் தொடர்பில் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேசம் ஏற்றுக் கொண்ட போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை இலங்கையில் பயன்படுத்தப்படாமையினாலேயே இவ்வாறு போலி தாள்கள் அச்சிடும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் நடவடிக்கை கடினமாக உள்ளதுடன், அவ்வாறான சில தொழில்நுட்பங்கள் இந்த நாட்டு வங்கி கட்டமைப்புக்குள் மாத்திரமேயுள்ளது.
போலி தாள்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக 5000 ரூபாய் தாள்களை தடை செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.