இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்க்கும்போது இலங்கை அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சாளர் ஒருவரை பொறுத்தவரையில் முதலில் கவனிப்பது அவரின் வேகம் மற்றும் ஸ்விங் செய்யும் திறமை என்பவை ஆகும்.
இதனை இலங்கையின் இளம் வீரர்கள் சிறப்பாக செய்துவருவதுடன், அதனை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிகளில் சுழற் பந்துவீச்சாளர்களின் பங்கு அதிகமாக காணப்படுகின்றது. எனினும் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு முன்னேற்றம் கண்டு வருகின்றது.
இதனை வலுப்படுத்தும் போது இலங்கை அணியின் எதிர்காலம் சிறந்தாதாக அமையும்.
அதுமாத்திரமின்றி பயிற்சிகளில் முன்னணி வீரர்களான லசித் மலிங்க மற்றும் நுவன் குலசேகர ஆகியோரும் பங்குபற்றினர், அவர்களும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனை பார்க்கும்போது இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்வதில் எந்தளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதனை புரிந்துக்கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.