இலங்கையின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெயரத்ன

ஜெரோம் ஜெயரத்ன (Jerome Jayaratne) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த மாவன் அத்தப்பத்து தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

சொந்த மண்ணில் இலங்கை அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் டெஸ்ட் தொடரை இழந்திருந்தமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் அடுத்தாக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதனையடுத்தே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ​ஜெரோம் ஜெயரத்னவின் தெரிவு இடம்பெற்றுள்ளது.

Related Posts