இலங்கையின் அணியை தவிர்த்தார் லசித் மாலிங்க

சம்பியன்லீக் போட்டிகளில் இலங்கை டுவென்டி டுவென்டி அணித் தலைவர் லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இலங்கை சார்பாக சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் தலைவராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் கடமையாற்றி இருந்தவர் லசித் மாலிங்க. சம்பியன் லீக் தொடரில் இலங்கை சார்பாக சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி பங்குபற்றவுள்ளது. ஆனாலும் லசித் மாலிங்க தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் இடம் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

bored-malinga-1

சம்பியன் லீக் தொடரில் சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்காக விளையாடுவதற்காக கிடைக்கும் 5 லட்சம் அமெரிக்கா டொலர்களில் 50 சதவீதத்தை வீரர்களுக்காக கோரி இருந்த போதும் இலங்கை கிரிக்கெட் 15 சதவீதத்தை மட்டுமே வழங்க சம்மதித்து இருந்தது.

இதன் பின்னரே லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட அனுமதி கோரி இருந்தார். இலங்கை கிரிக்கெட், லசித் மாலிங்க – சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்காக விளையாட விரும்புகின்ற போதும் அவரின் சொந்த விருப்பத்தின் படி இந்த முடிவை விட்டுள்ளோம் என இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்கள் வழங்கப்படும். லசித் மாலிங்க தனக்கு கிடைக்கும் ஊதியத்தில் எதனையும் இழக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts