இலங்கையின் அசாதாரண சூழ்நிலை கவலையளிக்கிறது : அஸ்வின்

இலங்கையில் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை கவலையளிப்பதாகவும் விரைவில் இந்நிலை மாற்றமடைய வேண்டுமெனவும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த அழகிய நாட்டில் தற்பொது நிலவுகின்ற அசாதாரண சூழல் விரைவில் முடிவடையும் என நம்புகின்றேன்.

தற்போதைய நிலை ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts