இலங்கையிடம் வீழ்ந்தது மே.தீவுகள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியுள்ளது.

Ajantha Mendis

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை, மழை இடையில் குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் (26 ஓவர்கள்) எட்டு விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை, 7 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்

Related Posts