இலங்கையிடம் பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்: பொது பல சேனா

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் என்று பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

140620205108_galagoda_aththe_gnanasara_thero_304x171_bbc

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்று குழு உறுப்பினர் டிலந்த விதானகே உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்று வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் நிருபர்களை சந்தித்துப் பேசினர்.
இதன்போதே, பாப்பரசர் இலங்கையரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பொதுபல சேனா கூறியது.

ஞானசார தேரர் தரப்பிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே, கடந்த காலங்களில் இருந்த பாப்பரசர்கள் பல்வேறு நாடுகளிடம் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதாகக் கூறினார்.

அவர்களின் அழிப்பு நடவடிக்கைகள், கொலைகளுக்காக முன்னைய பாப்பரசர்கள் பல நாடுகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். அதேமாதிரியான நிலைமை எங்கள் நாட்டிலும் ஏற்பட்டது. இங்கு பல பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டன. பிக்குகள் கொல்லப்பட்டனர். அதனால் பாப்பரசரிடமிருந்து பகிரங்க மன்னிப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்’

என்று ஞானசார தேரர் சார்பில் ஆங்கிலத்தில் பதிலளித்தார் டிலந்த விதானகே.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கத்தோலிக்கர்கள் அல்ல, இங்கிலாந்து திருச்சபையை சேர்ந்தவர்கள் தானே என்று ஊடகவியலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

‘பாப்பரசர் பிரித்தானியர் அல்லாவிட்டாலும் தீர்மானம் எடுக்கப்பட்டது அங்கிருந்து தான்’ என்று கூறிய ஞானசார தேரர், மற்ற ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களுடனான ஒத்துழைப்புடனேயே பிரிட்டிஷார் மதத்தைப் பரப்புவதற்கும் வணிக நோக்கத்துக்காகவும் இலங்கையை ஆண்டதாகவும் கூறினார்.

பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரியில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts