இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் முடக்கும் அரசு ஆணையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373-வது தீர்மானத்துக்கு அமைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அனைத்து அசையும், அசையா சொத்துகள், நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணை அறிவிப்பு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், சொத்துக்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும். இதே ஐ.நா. சட்டப்பிரிவின்கீழ், மேலும் பலரது பெயர்கள் கொண்ட பட்டியல் ஒன்று, இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்தப் பட்டியல், விரைவில் அரசாணையில் இடம்பெறும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Thursday
- December 26th, 2024