இலங்கையர்கள் பல ஆபத்தான சூழலை எதிர்கொண்டுளதால் அவர்களின் புகலிட விண்ணப்பங்களை நிராகரிக்கவேண்டாம் – பிரிட்டன் அமைச்சர்

“இலங்கையர்கள் பல ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளனர். எனவே லண்டனில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதை இடைநிறுத்துமாறும் புகலிடக் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு பிரிட்டன் உள்நாட்டு அலுவலகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்”

இவ்வாறு பிரிட்டன் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லிஸ் மைக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் சட்டபூர்வமான முறைப்படி பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துகின்றேன்.

பிரிட்டனில் புகலிடக் கோரிய இலங்கையர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதை இடைநிறுத்துமாறும் புகலிடக் கோரிக்கையாளர்களின் கொள்கையை பிரிட்டன் உள்நாட்டு அலுவலகம் மீளாய்வு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts