பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 003223445585 அல்லது 0032471872745 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதரகம் முன்னதாக அறிவித்திருந்தது.