Ad Widget

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் தடுப்பதற்கும், இடையூறு செய்வதற்கும், இடைமறித்து திருப்பி அனுப்புவதற்கும், கூட்டுப்பொறுப்பை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 மே மாதம் முதல் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 9 ஆயிரம் இலங்கையர்கள் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலில் உயிரிழப்பைத் தடுக்கவும், அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், குற்றவாளிகள் கடத்தல் வர்த்தகத்தை ஒழிக்கவும் நாங்கள் இதைச் செய்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
2022 மே மாதம் முதல், அவுஸ்திரேலியாவிற்கு ஒழுங்கற்ற கடல்சார் குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 9ஆயிரம் இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த ஒவ்வொரு இலங்கையர்களின் கடத்தல் படகுகளும் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த அனைவரும் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts