இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு

ஐக்கிய அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இது குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் எனவும், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts