இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மருத்துவ வசதியின்றி உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியாவில், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உரிய முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுமையான ஆஸ்துமா நோயாளியான குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவுகளுக்குள் பிரவேசித்து சில மணித்தியாலங்களில் அருள்செல்வம் வேல்முருகு என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

உரிய முறையில் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையே இந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணத்திற்கான காரணம் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

West Australian coroner னால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Related Posts