இலங்கைப் பிரஜை கனடாவில் கொலை

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Manikkarajah-Canada

40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன.

அருகில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு கட்டிடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தனர்.

முக்கோண காதல் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

Related Posts