இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில்யாழ். பல்கலை மூன்றாம் இடத்துக்கு முன்னேற்றம்!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது.

2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, போதனை சார் வள ஆளணியினரின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், ஆராய்சிக் கட்டுரைகளின் சர்வதேச சமர்ப்பணம் போன்ற பல அளவு கோல்களின் அடிப்படையிலேயே இந்தத் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவிய ரீதியில் நாடுகளினதும், பல்கலைக்கழகங்களினதும் வரிசைப்படுத்தலை https://www.topuniversities.com/university-rankings/asian-university-rankings/2021 என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

Related Posts