இலங்கைத் தீவுக்கு பாரிய ஆபத்து! எச்சரிக்கும் புவியியல் நிபுணர்!!

இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய பூமித் தட்டுப்பகுதி காணப்படுவதாகவும், இதன் தாக்கம் சிறியதாக இருக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பூமித்தட்டுக்கள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நகரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்திலும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை இது நகரும்.

இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டு ஏற்கனவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண்சரிவுகள் ஏற்படவும் இது பாரிய அழுத்தமாக அமையும்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியாவிற்கு உள்ளக அதிர்வுகள் ஏற்பட கூடும். இதில் இலங்கைக்கும் தாக்கங்கள் ஏற்படலாம். எதிர்காலத்தில் இலங்கையில் மண்சரிவு சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும். இலங்கையில் நில அதிர்வு ஏற்படாது என நாம் நிம்மதியாக இருக்க முடியாது.

ஏனெற்றால் கடந்த காலங்களில் இலங்கையில் பாரியளவு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 2012ம் ஆண்டு இந்து – அவுஸ்திரேலிய பூமியோட்டில் பாரிய அதிர்வு ஏற்பட்டது. எதிர்காலத்தில் இலங்கையில் பாரிய நில நடுக்கம் ஏற்படக் கூடும். பாரிய நில அதிர்வினை எதிர்நோக்க இலங்கை தற்போது இருந்தே ஆயத்தமாக வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts