இலங்கைத் தமிழ் பெண் இந்தியாவில் தற்கொலை!

திருவண்ணாமலை வந்தவாசி அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாமில் வசித்து வந்த பரமேஸ்வரி(வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கும் விழுப்புரம், கீழ்புதுப்பட்டு அகதிமுகாமைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அந்தப்பெண் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிக்கொண்டுள்ளார். தீயை அணைத்து அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனளிக்காது மரணமாகிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கீழ்கொடுங்கலூர் பொலிஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Related Posts