இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிடாது!

நடிகர் சங்கத் தேர்தலுக்கு பிறகு தற்போது படங்களிலும் அக்கறை காட்டி வருகிறார் விஷால். தற்போது பாண்டியராஜின் இயக்கத்தில் கதகளி படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம் நடிகர் சங்க விஷயத்திலும் அக்கறை காட்டி வரும் விஷால் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால்,

நடிகர் சங்கத்துக்கு ஜனவரியில் இருந்து புது கட்டடம் கட்டப்படும். காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.இந்த விஷயத்தில் அரசு தான் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

காவிரி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படாது.

வரும் சட்டசபை தேர்தலில் அரசியலில் நுழையும் எண்ணம் துளியுமில்லை என்று விஷால் தெரிவித்தார்.

Related Posts