இலங்கைத் தமிழர்களை வைத்தே இந்தியாவில் அரசியல்: வடக்கு முதலமைச்சர்

இந்தியாவில் இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்வது சாதாரணமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் உள்ள அரச சித்த மருத்துவக் உள்ள அகத்தியர் கோயிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன், அவர்கள் வாழ்வு மேம்பட மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய அரசு அக்கறையுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதுடன், மேலும் பல விடயங்களில் அவர்களில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

விசேடமாக இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் இந்தியா விசேட கவனமெடுத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழியமைக்கவேண்டும்’ என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts