இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்று சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகப் பொதுச்சபை கூட்டப்படவில்லை என்றும் அறிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியில் சிலரின் எதேச்சதிகாரம் மிக்க செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பலர் அந்த கட்சியை விட்டு வெளியேறியும், பதவிகளைக் கைவிட்ட வண்ணமும் உள்ளனர்.

இந்த நிலையில் மார்க்கண்டு நடராசாவினால் இந்த வழக்கு நேற்று யாழ்., நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts