இலங்கைக்கு நேராக சூரியன்: இன்றுமுதல் வெப்பம் அதிகரிக்கும்!!

இலங்கைக்கு நேராக சூரியன் காணப்படுவதினால் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றுமுதல் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 12.13லிருந்து ஹம்பாந்தோட்டை , கட்டுதம்பே , நாகியாதெனிய மற்றும் மலிதுவ ஆகிய இடங்களில் நேராக சூரியன் காணப்படும்.

நாடெங்கிலும் 30 செல்சியசிற்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்துடன் நிறைவடையவுள்ளது.

இலங்கைக்கு நேராக சூரியன் காணப்படுவதினால் தற்பொழுது நாட்டில் வீசும் காற்றின் வேகம் குறைவாகவும் சுற்றாடலில் வெப்பநிலை அதிகரிப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts