இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை!- இராணுவ புலனாய்வு அதிகாரி

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும், அதனை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதென்றும் இராணுவ புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டார்.

Related Posts