குறைந்த வயதில் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் குக் தகர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவர். கடந்த 2005ல் கோல்கட்டாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இவர், இந்த இலக்கை குறைந்த வயதில் (31 வயது, 10 மாதம்) எட்டிய முதல் வீரரானார்.
இந்த சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் முறியடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 31 வயது, 133 நாட்கள் ஆகும் குக், இதுவரை 126 டெஸ்டில் இவர் 9964 ரன்கள் குவித்துள்ளார். வரும் 19ல் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் லீட்சில் துவங்குகிறது. இதில் குக், 36 ரன்கள் எடுத்தால், 10 ஆயிரம் ரன்களை எட்டி விடுவார். இதன் மூலம், இந்த இலக்கை குறைந்த வயதில் எட்டிய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.