Ad Widget

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம்

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் தலை­சி­றந்த சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான பென் ஸ்டோக்ஸுக்கு, இலங்­கைக்கு எதி­ராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்­டி­யின்­போது முழங்­காலில் காயம் ஏற்­பட்­டது. இதனால் 2ஆவது டெஸ்ட் போட்­டியில் அவர் பங்­கேற்­பது சந்­தே­க­மா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ben_stokes

இங்­கி­லாந்து முதல் இன்­னிங்ஸை விளை­யாடும் போது அந்த அணியின் முன்­னணி வீரர் ஸ்டோக்ஸ் 12 ஓட்­டங்­களை எடுத்தார். 7 ஓவர்கள் பந்து வீசி 1 விக்­கெட்டை வீழ்த்­தினார்.

2ஆ-வது நாள் அவர் பந்து வீசும்­போது அவ­ரது முழங்­காலில் காயம் ஏற்­பட்­டது. இருந்­தாலும் அடுத்த நாள் காலையில் களம் இறங்­கினார். ஆனால், அவரால் சிறப்­பாக செயற்­பட முடி­ய­வில்லை. உட­ன­டி­யாக வெளியேறிவிட்டார். இதனால் அடுத்த டெஸ் டில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.

Related Posts