இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்: அசோக் கே. காந்தா

India_-ashok_kanthaஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்குகான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, திங்கட்கிழமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அக்கலந்துரையாடலின் போது, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் தமிழரசு கட்சியின் துணைச் செயலளார் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருப்பதாகவும் 13ஆவது திருத்தினை முன்வைத்த இலங்கை அரசாங்கம் அதனை தர மறுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த அசோக் கே. காந்தா, ‘தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள இந்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு இராஜதந்திரரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, இதற்கான தீர்க்கமான முடிவினை அரசாங்கம் எடுக்குமென்றும், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இந்தியா வாக்களிக்கும்’ எனவும் குறிப்பிட்டார்.

Related Posts