இலங்கைக்கு ஆதரவாக டிரம்பின் அதிரடி தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்கள் புரிந்ததாக முறைப்பாடுகளை தயார் செய்து முன்வைத்ததாக கூறப்படும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணிபுரியும் நான்கு பேரை டொனல்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

புதிய இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் மிலர்சன் நியமிக்கப்பட்டு, இந்த அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டமையினால் தமிழீழ புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையினால் தமிழீழத்துக்கு ஆதரவானவர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்து துடைத்தெரியப்பட்டுள்ளதாக உள்நாட்டு பிரதான சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts