இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!- பல கேள்விகளுக்கு அரச அதிபர் மௌனம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் நேற்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட கிரிட் லேச்சேன், நோர்வே தூதரக ஆலோசகர் டேகிறிமயோஸ் ஆகிய இருவருமே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தவர்களாவார்கள்.

நேற்றய தினம் காலை யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கைது உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கேள்விகேட்டபோது யாழ். அரச அதிபர் மௌனம் காத்ததாக தெரியவருகின்றது.

தொடர்ந்து, யாழ்.ஆயர், நல்லை ஆதீனம், வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினரையும் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இக்குழுவினர் முல்லைத்தீவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

Related Posts