இலங்கைக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் தனது வரவு – செலவுத் திட்டத்தில் 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 2014-15 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இந்திய நாடளுமன்றில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று சமர்ப்பித்தார்.
இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு 14,730 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவித்திட்டங்களை வழங்குவதற்காக 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று நேபாளத்துக்கான உதவித்திட்டங்களுக்கு 450 கோடி ரூபாவும், பங்களாதேஷிற்கான உதவித்திட்டங்களுக்காக 350 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.