இலங்கைக்காக குரல் கொடுக்கப் போவதாக டோனி பிளேயர் உறுதிமொழி

உலகில் இலங்கை தொடர்பில் காணப்படும் தவறான கருத்துக்களை களைய இலங்கை சார்பாக குரல் கொடுக்கப் போவதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

maith-player-dony

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள டோனி பிளேயர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பிளேயார் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டங்களின் போது இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் பிளேயார், ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.

Related Posts