இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜேர்கன் மோர்காட் (Jurgen Morhard) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர், யாழ்.ஆயரை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்பின்னர் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியையும் இவர் சந்தித்துக் கலந்துரையாடினார். இவர் இதுதவிர மேலும் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.