Ad Widget

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரான்ஸ் நாவலாசிரியர்

இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

patrick_modiano

இவருடைய படைப்புகள் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஆளுகையின் கீழிருந்த பிரான்ஸைப் பற்றி அதிகம் பேசுவதாகவும் அடையாளம், நினைவுகள் மற்றும் குற்ற உணர்வு போன்றவற்றுக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் ஸ்விடனில் இருக்கும் நோபல் குழு தெரிவித்துள்ளது.

காணமல்போன நபர் என்ற தலைப்பில் இவர் எழுதிய நாவல், இவரின் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.

இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தனது ஞாபகசக்தியை இழக்கும் ஒரு துப்பறியும் நிபுணரைப் பற்றிய கதை இது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து இரு மாதங்களான பிறகு, மேற்கு பாரிசில் உள்ள ஒரு புறநகர் பகுதியில் பேட்ரிக் மோடியானோ பிறந்தார். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெரும் 11 ஆவது பிரஞ்சுக்காரர் இவராவார்.

Related Posts