இறைவரி திணைக்களத்தில் ஊழல்!- இரகசிய பொலிஸார் விசாரணை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள் தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி, சுமார் 180 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே அது தொடர்பில் இரகசிய காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related Posts