கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இறுவெட்டுகளில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளை இறுவெட்டுகளிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும். அதேவேளை கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இப்பெறுபேறுகள் அடங்கிய இறுவெட்டுகள் விநியோகிக்கப்படும்.
கொழும்புக்கு வெளியே உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு தபாலில் இறுவெட்டுகளளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.