இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருக்கின்றன எனவும், இதனை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போர் நிறைவுக்கு வந்த எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது போரில் சரணடைந்தவர்களின் விவரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.