இறுதி யுத்தத்தின்போது சிறீலங்கா இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை வீசவில்லையென போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் கொத்துக் குண்டுகளை வாங்குவதற்கான பணபலம் தம்மிடம் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லை. அதனை வாங்குவதற்கான பணபலமும் எம்மிடமிருக்கவில்லை. இது தொடர்பாக நான் சாட்சியமளிக்கவும் தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தி கார்டியன் எனும் ஆங்கில ஊடகத்தில் இலங்கையில் இறுதிப் போரின்போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்ற ஆதாரத்துக்கான புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்த விடயம் சிறீலங்கா அரசாங்கத்துக்கெதி ரான எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமை ஆணையாளரும் இது தொடர்பான விசாரணையை வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.