இறுதிச்சுற்றுக்கு நாள் குறிச்சாச்சு

ண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்று தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

madhavan-iuthy-shuttu

இதில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் சில காரணங்களால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை சி.வி.குமாரின் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். யுடிவி நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. இப்படம் ஜனவரி மாதம் 29ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related Posts