இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’

ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி கிடக்கிறது. அதன்வெளிப்பாடாக இப்போது ஹாலிவுட் மேக்கப் மேன், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என பிரம்மாண்ட கலைஞர்களுடன் ஒரு பிரம்மாண்ட படத்தை நடித்தும், தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன்.

shiva

ரெமோ என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் அதுவும் இரண்டு ரோலில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கிறது. செப்டம்பரில் படம் வெளியாகலாம் என தெரிகிறது.

Related Posts