இறந்த மயிலுடன் புகைப்படம் – உண்மையில் நடந்தது என்ன?

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தில் இருந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

peckcook-mayel-veddai-elephnetpass

உயிரிழந்த மயிலை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு வௌியான குறித்த புகைப்படத்தில் இருந்த நபர் வென்னப்புவ – பொரலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த டப்ளியூ.பிரியந்த பிரணாந்து எனத் தெரியவந்துள்ளது.

இவர் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றார்.

இவரது மனைவியிடம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி தனது குடும்பத்தினர் ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காக சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வாகனத்தில் மோதி குறித்த மயில் விபத்துக்குள்ளாகிய நிலையில் இறந்துவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதை தன் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் எடுத்து வந்ததாகவும் தனது கணவர் ஒரு கையில் துப்பாக்கியுடனும் மறுகையில் மயிலுடனும் புகைப்படம் எடுத்தாரே தவிர அதனைக் கொலை செய்யவில்லை எனவும் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பயணத்தின் போது தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றமையாலேயே தனது கணவர் கையில் துப்பாக்கி (Air rifle) வைத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தனது கணவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாட்டுக்கு வர வேண்டுமாயின் அதனை செய்யத் தயாராக உள்ளதாகவும், அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts