இரு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றமடையும்: மங்கள

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடவோ அல்லது குறையவோ முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, சிறுவர்களின் சேமிப்பு கணக்கு மீதான 2.5 வீத வரியையும் திரும்பப் பெறுவது குறித்த நிதியமைச்சின் தீர்மானத்தையும் வெளியிட்டுள்ளார்.

Related Posts