வீடுகளிலிருந்து வெளியேறி, இரண்டு நாட்களாக விளையாட்டு மைதானமொன்றில் தங்கியிருந்த, சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரையும் மாணவரொருவரையும், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
15 வயதுடைய இவ்விரு மாணவர்கள் இருவரும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இவ்விருவரும், நீர்க்கொழும்பு, கடொல்கெலே பொது மைதானத்தில் தங்கியிருந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவியைக் காணவில்லையென, அவரது பெற்றோரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாணவன், ஐஸ்கிரீம் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி, பெற்றோரிடம் 200 ரூபாய்ப் பணத்தைப் பெற்றுக்கொண்டே, வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாணவி, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.