இருமுகன் யூனிட்டை அசரவைத்த விக்ரம்!

விக்ரமுடன் முன்பு ஒரு படத்தில் நடிக்கயிருந்த நயன்தாரா, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது ரகசிய ஏஜென்ட், திருநங்கை என இரண்டு விதமான வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருக்கிறார்.

vikram-iru-mukan

மேலும், வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களைகூட ஆச்சர்யப்படுத்தி வந்துள்ள விக்ரம், இந்த படத்தில் நடித்துள்ள திருநங்கை வேடத்தில் இதுவரை எந்த நடிகர்களும் நடித்திராத ஒரு வித்தியாசமான மேனரிஸத்தை பின்பற்றி அசத்தி வருகிறாராம்.

அந்த வகையில் இதற்கு முன்பு, சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ என பல படங்கள் அவரது பெயர் சொல்லி வரும் நிலையில், இந்த இருமுகன் படம் விக்ரமை இன்னும் பெரிய லெவலுக்கு கொண்டு செல்லும் என்கிறார்கள்.

மேலும், மலேசியாவைத் தொடர்ந்து தற்போது காஷ்மீரிலுள்ள லடாக் பகுதியில் சண்டை காட்சிகளில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம், அதன்பிறகு நயன்தாராவுடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் நடிக்கிறாராம்.

Related Posts